செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…

நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!…

நடிகர் தனுஷை ஓரங்கட்டிய வட இந்தியா மீடியாக்கள்!… post thumbnail image
சென்னை:-வட இந்தியா சினிமாவில் வெற்றி பெற்ற தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் நடிகன் என்றால் சொல்லவே வேண்டாம், ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே கீழே தள்ளி விட்டது பாலிவுட். அந்த வகையில் தனுஷ், தான் நடித்த முதல் ஹிந்தி படத்திலேயே ரூ 100 கோடி கிளப்பில் இணைந்தார். இதை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் ஷமிதாப்.

இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே எழுந்துள்ளது. ஆனால், வட இந்தியா மீடியாக்கள் இப்படத்தை பற்றி நெகட்டிவ் தகவலாக தான் தற்போது வரை கூறி வருகின்றனர்.
இவை அனைத்திற்கும் ஒரே காரணம் தனுஷ், பி.சி, இளையராஜா என அனைவரும் தமிழர்கள் என்பதே, திறமை இருந்தால் எந்த இடத்திலும் வெற்றி பெறலாம் என்று நிரூபித்தவர் தனுஷ், ஆனால், அவரது திறமையை இந்த வட இந்தியா மீடியாக்கள் அனைவரும் சேர்ந்து ஒழித்து விட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி