அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!… post thumbnail image
புது டெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் நுபுல் ஷர்மாவை விட 31 ஆயிரத்து 583 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றியை சுவைத்த அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் முதல் மந்திரியாக மீண்டும் பதவி ஏற்கவுள்ளார்.

வரும் 14ம் தேதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் அவர் பதவி ஏற்றுக்கொள்வார் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஷுதோஷ் அறிவித்துள்ளார். இதற்கிடையில், டெல்லியில் ஆட்சியமைக்கவுள்ள கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி