செய்திகள்,திரையுலகம் ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…

ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!…

ஓம் சாந்தி ஓம் (2015) படத்தின் திகில் கதை விமர்சனம்!… post thumbnail image
டி.சூர்யபிரபாகர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் , நீலம் உபாத்யாயா, ராஜேந்திரன் ,ஜூனியர் பாலையா, ஆடுகளம் நரேன், பைஜூ, வினோதினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்’. ’முனி’, ’காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘டார்லிங்’ வரிசையில் ஆவி சம்பந்தப்பட்ட திகில் நகைச்சுவை கலந்த கதைதான் இதுவும். பேய் படங்களிலேயே முதல் முறையாக ’ஓம் சாந்தி ஓம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இது வரையிலும் பேய், பிசாசு , படங்கள் என்றாலே படத்திற்கு யு/ஏ சான்றிதழே கிடைக்கும். ஆனால் இந்த படத்திற்கு தற்போது யு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.அருமைச்சந்திரன் கூறும்போது, ஐந்து ஆத்மாக்கள் சம்பந்தப்பட்ட கதை இது . இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தினர் குழந்தைகளைக் கவரும்படி இருக்கும். வழக்கமாக தணிக்கைத்துறையினர் திகில் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். இப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். பேய், ஆவி சம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறோம் என்று அவர்களே பாராட்டிச் சொன்னார்கள்.

ஆவி என்றால் பயப்பட வேண்டாம் அது நம் முன்னோர்கள்தான். ஆவிகள் எல்லாம் பாவிகள் அல்ல. அவை நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்தான். அவை வருவது பயமுறுத்த அல்ல நம்மை ஆசீர்வதிக்கத்தான் என்கிற புதிய பரிமாணத்தில் படம் உருவாகியுள்ளது. ஆவி பற்றியஅச்சம் , நகைச்சுவை இவற்றுடன் கல்வி வியாபாரமாவது, மருந்து கலப்படம் போன்ற சமூகக் கருத்தையும் சொல்லியிருக்கிறோம். என்கிறார் தயாரிப்பாளர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி