‘விஜய் – 59’ல் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். விஜய் புலி படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடாத படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டது.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இப்படத்தில் இரண்டு ரொமாண்டிக் பாடல்கள் இடம்பெறுகிறது. அவை இசை பிரியர்களுக்கு பிடித்த பாடல்களாக இருக்கும். அதேசமயம் மற்ற பாடல்கள் விஜய் சாரின் மாஸ் இமேஜுக்கு தகுந்தவாறு இருக்கும் என்றார். மேலும் இப்படம் சிறப்பாக உருவாக வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த அணியும் இரவு பகலாக உழைத்து வருவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். ‘ராஜா ராணி’ வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவலின்படி இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கமிட்டாகியுள்ளார்.

இவர் ஏற்கனவே அட்லியுடன் அவரது முதல் படமான ‘ராஜா ராணி’யில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான டார்லிங் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கோஸ்ட் கோபால் வர்மா எனும் கதாபாத்திரம் இவரது அந்தஸ்தை கோலிவுட்டில் மென்மேலும் உயர்த்தியுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் 59வது படத்தில் அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முதலில் நயன்தாரா தான் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: