சபரிமலை கோவிலில் 12ம் தேதி நடை திறப்பு!…

விளம்பரங்கள்

இடுக்கி:-கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் வருகிற 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். இதையடுத்து படிபூஜை, உதயாஸ்தம பூஜை, நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட அனைத்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

பின்னர் 17ம் தேதி இரவு நடை மீண்டும் அடைக்கப்படும். அதையடுத்து அடுத்த மாதம் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்காக மீண்டும் நடை திறக்கப்படும். மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: