செய்திகள்,திரையுலகம் பிரபல இயக்குனரை புலம்ப வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

பிரபல இயக்குனரை புலம்ப வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!…

பிரபல இயக்குனரை புலம்ப வைக்கும் நடிகர் விஜய் சேதுபதி!… post thumbnail image
சென்னை:-பிரபல இயக்குனர் வி.இசட். துரை கடைசியாக 6 என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்காக துரை அதிக அளவில் உழைத்தார். ஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் நடிகரை வைத்து தான் படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்த துரை விஜய் சேதுபதியை அணுகி இருக்கிறார்.

கையில் அரை டஜன் படங்களை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் விஜய் சேதுபதி, துரை அவர்களின் கதையை கேட்டுவிட்டு, இப்படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் நடிக்கிறேன் என்று கூறிய விஜய் சேதுபதி, இன்னும் கால்ஷீட் தரவில்லையாம். இதனால் விஜய் சேதுபதி எப்போது கால்ஷீட் தருவார் என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் துரை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி