பி. கே ரிமேக்கில் நடிகர் விஜய் நடிக்க வில்லை – என்ன காரணம்!…

விளம்பரங்கள்

சென்னை:-சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் பி கே படத்தை சத்யம் திரைஅரங்கில் குடும்பத்தோடு கண்டுகளித்தார். அதன் பிறகு அவர் பி.கே படத்தின் ரிமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்ற செய்தி நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வலம் வந்தன. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க போகிறார் என்ற செய்தியும் வந்தது.

ஆனால் இப்போது எந்தவொரு ஒரு ரீமேக் படத்திலும் நடிக்க ஆர்வம் அவருக்கு இல்லை என்பதே உண்மை, சிம்புதேவன் படத்துக்கு பிறகு விஜய் மீண்டும் ஏ .ஆர் முருகதாஸ் சிஷ்யர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க போகிறார் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது. அதே போல் இயக்குனர் ஷங்கரும் ரீமேக் படத்தை இயக்க போவதில்லை என்று முடிவில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: