செய்திகள் காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்!…

காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்!…

காதலர் தினத்தன்று நாடு முழுவதும் நெருக்கமாக பிடிபடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம்!… post thumbnail image
லக்னோ:-மேற்கத்திய கலாசாரமான காதலர் தினத்தை நாட்டில் உள்ள சில இயக்கங்கள் எதிர்த்து வருகின்றன. காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் வரம்புமீறி நடந்துக் கொள்ளும் காதல் ஜோடிகளை இந்த இயக்கத்தினர் விரட்டி அடித்து வருவது காதலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், நாட்டின் பாரம்பர்யமான கலாசாரத்தையும், கற்பொழுக்கத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என கருதும் பழைமைவாதிகளிடையே இந்த நடவடிக்கை ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், காதலர் தினமான வரும் 14ம் தேதியன்று நாடு முழுவதும் மிக நெருக்கமான ஜோடிகளாக சுற்றித்திரியும் காதலர்களை பிடித்து கட்டாய திருமணம் செய்து வைப்போம் என இந்து மகாசபை அறிவித்துள்ளது.இது தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்து மகாசபை தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் கூறியதாவது:-
நமது நாட்டில் ஆண்டின் 365 நாட்களும் காதலுக்கு உரிய தினம்தான். ஆனால், அந்தக் காதலை பூங்காக்களிலும் தெருக்களிலும் காட்சிப்படுத்தக் கூடாது. பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்கள் காதலை கேவலப்படுத்துகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கு ஒவ்வாத மேற்கத்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் முன்னெடுத்து செல்ல இவர்கள் முயற்சிக்கின்றனர்.

திருமண வயதையடைந்த ஆணும்-பெண்ணும் தங்களின் காதலில் உறுதியாய் நின்று, அந்த பந்தத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல தயாராக இருக்கும் காதலர்களுக்கு நாங்கள் திருமணம் செய்து வைப்போம். ஆனால், திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லாமல் வெறும் பொழுதுப் போக்குக்காக மட்டும் சந்தித்து கொள்ளும் ஜோடிகள் பிடிபட்டால் இது தொடர்பாக அவர்களின் குடும்பத்துக்கு தகவல் அளித்து, கண்டித்து வைக்கும்படி கூறுவோம். இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களில் இளைஞர்கள் குழுக்களை நியமித்துள்ளோம்.

வேற்று மதங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் பிடிபட்டால், அவர்களின் முன்னோர்களின் மதமான இந்து மதத்துக்கு திரும்பி தங்களது காதலை நிரூபிக்கும்படி கேட்டுக் கொள்வோம். இதற்கு அவர்கள் மறுத்து விட்டால், அது ‘காதல் ஜிஹாத்’ ஆகும். எதிர்பாலினத்தவரை தனது காதல் வலையில் வீழ்த்த நடத்தப்பட்ட சதியாக அது கருதப்படும்.இதைப் போன்ற நிலையில் முறையான ‘சுத்திகரிப்பு’க்கு பின்னர் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும். இதை விடுத்து, தவறான முன்மாதிரிக்கு காரணமாக அமையக்கூடிய மேற்கத்திய கலாசாரங்களை நாம் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி