நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன. இந்நிலையில், முந்தைய அரசுகளைப் போல், தற்போதைய மோடி அரசும், நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட மறுத்துள்ளது.

சுபாஷ் அக்ரவால் என்பவர், பிரதமர் அலுவலகத்திடம் இந்த ஆவணங்களை கேட்டு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து இருந்தார். ஆவணங்களை வெளியிடுவதில் பொது நன்மை அடங்கி இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார். ஆனால், அவரது வாதத்தை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. ஆவணங்களை வெளியிடுவதில், பொது நன்மை எதுவும் இல்லை என்றும், அவற்றை வெளியிட முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

வெளிநாட்டுடனான உறவை பாதிக்கக்கூடிய தகவல்களை வெளியிடாமல் மறைக்கலாம் என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் அலுவலகம், அந்த காரணத்தாலேயே ஆவணங்களை வெளியிட முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், எந்த நாட்டுடனான உறவு பாதிக்கப்படும் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: