ஆந்திர ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘என்னை அறிந்தால்’ படம்!…

விளம்பரங்கள்

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் இப்படத்தின் வசூல் நன்றாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இதே ஆர்வத்துடன் தான் ஆந்திர ரசிகர்களும் இருந்தனர். படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய தியேட்டர், ஆன்லைன் என முயற்சி செய்தனர். ஆனால், படம் தெலுங்கில் அடுத்த வாரம் தான் ரிலிஸாகவுள்ளதாம். இச்செய்தி நமக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும், ஆந்திர ரசிகர்களுக்கு ஏமாற்றமும், அதிர்ச்சியுமே தான் கிடைத்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: