செய்திகள் ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!…

ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!…

ஆபிரகாம் லிங்கனின் தலைமுடி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கடந்த 1865ம் ஆண்டு, ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட சிறிது நேரத்தில், அவரது தலையில் இருந்து மயிர்க்கற்றையை டாக்டர் ஜோசப் பர்னஸ் என்பவர் நீக்கினார்.

இந்த மயிர்க்கற்றை மற்றும் ஆபிரகாம் லிங்கனுடன் தொடர்புடைய பல்வேறு பொருட்களை தனியார் நிறுவனம் ஒன்று பாதுகாத்து வருகிறது. மறைந்த லிங்கனின் தனியார் நினைவகமாக கருதப்படும் இந்த நிறுவனம், சமீபத்தில் லிங்கனின் மயிர்க்கற்றையை ஏலம் விட்டது. அத்துடன் அவரை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத்துடன் தொடர்புடைய பொருட்களும் ஏலம் விடப்பட்டன.

இந்த பொருட்கள் அனைத்தும் சுமார் ரூ.5 கோடிக்கு ஏலம் போயின. குறிப்பாக லிங்கனின் மயிர்க்கற்றை 25 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.15 லட்சம்) ஏலம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனினும் இவ்வளவு அதிக விலை கொடுத்து மயிர்க்கற்றையை வாங்கியவரின் பெயரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி