51 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்: சுய சர்வே முடிவு!…

விளம்பரங்கள்

புது டெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களும், தேர்தல் பிரசாரம் முடிவடையை இன்னும் ஒரே நாளும் இருக்கும் நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றனர்?… என ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லிவாசிகளிடம் கருத்துக்கணிப்பு நடத்தினர். அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி 51 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

51 இடங்களில் வெற்றி பெறும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியின் ஆட்சியை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க. 15 இடங்களிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை இன்று வெளியிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திரா யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 53 சதவீதம் வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக வர வேண்டும் என்றும் 24 சதவீதம் பேர் பா.ஜ.க. வேட்பாளரான கிரண் பேடி அப்பதவியை ஏற்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 46 சதவீதம் வாக்குகளும், பா.ஜ.க. 33 சதவீதம் வாக்குகளும், காங்கிரஸ் கட்சி 11 சதவீதம் வாக்குகளும் பெறும் என ஆம் ஆத்மி நடத்திய இந்த “சுய கருத்துக்கணிப்பு” முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னதாக இரு பிரபல ஊடகங்கள் நடத்திய தனித்தனி கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, ஆம் ஆத்மி 34-46 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என தெரியவந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: