அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!…

வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ.30 ஆயிரம் கோடியை மீட்க நடவடிக்கை!… post thumbnail image
கொழும்பு:-இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக பதவி வகித்தார். அப்போது இவரும், குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரசாரத்தின் போது புகார் கூறப்பட்டது.

அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக தேர்தல் பிரசாரத்தின் போது மைத்ரிபாலா சிறிசேனா வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார். ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்க அவர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.

அதற்கு நரேந்திர மோடியின் அரசும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை இந்திய நிதித்துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இலங்கை நீதி துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி