செய்திகள்,திரையுலகம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’!…

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’!…

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ‘என்னை அறிந்தால்’!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கான தியேட்டர் டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் ‘என்னை அறிந்தால்’, இதுவரை அஜித் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியாகும் படமாக வரவிருக்கிறது.

இப்படத்தை அமெரிக்காவில் மட்டும் 95 திரையரங்குகளில் திரையிட உள்ளனர். ஏற்கெனவே அஜித் நடிப்பில் வெளிவந்த ‘ஆரம்பம்’ படம் அங்கு 78 திரையரங்குகளில் திரையிடப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ‘என்னை அறிந்தால்’ தகர்த்தெறிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலக அளவில் சுமார் 1000 திரையரங்குகளிலும் ‘என்னை அறிந்தால்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதுவரை வெளிவந்த அஜித் படங்களிலேயே இப்படத்திற்குத்தான் மிகப்பெரிய ஓபனிங் உள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி