ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!…

விளம்பரங்கள்

சென்னை:-அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது யார் யார் யாருடைய வேடத்தில் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பகத் பாசில், நஸ்ரியா வேடத்தில் சித்தார்த், சமந்தாவும், துல்கர் சல்மான், பார்வதி மேனன் வேடத்தில் ஆர்யா, நித்யா மேனனும் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தை பற்றி வந்த தகவலின்படி, ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா, நிவின் பாலி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. அதோடு படத்தை நான்கு மாதத்தில் முடிக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: