பேஸ்புக் காதலியை தேடி சென்னை வந்த காஷ்மீர் வாலிபர்!…

விளம்பரங்கள்

ஆலந்தூர்:-சென்னை திருவான்மியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவான்மியூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முகமது அப்சா (வயது 30) என தெரியவந்தது.

அவரிடம் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரியாசூதீன் மற்றும் கியூபிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதலால் காதலியை தேடி சென்னை வந்து கடந்த சில நாட்களாக தேடிவருவதாக கூறினார். இதையடுத்து காஷ்மீர் வாலிபருக்கு போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து சென்னையில் இருந்து அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: