செய்திகள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3ம் தேதி விடுமுறை!…

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3ம் தேதி விடுமுறை!…

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 3ம் தேதி விடுமுறை!… post thumbnail image
சென்னை:-வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு வருகிற 3ம் தேதி தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன் படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின் படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட தகவல் சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி