ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…

விளம்பரங்கள்

பெர்த்:-ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 3 போட்டியில் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்திடம் 2 முறை தோல்வியை தழுவியது. காயம் அடைந்து குணமடைந்த ஜடேஜா நேற்றைய ஆட்டத்தில் இடம் பெற்றார். ஆனால் அவரது அவுட் மிகவும் வேதனையாக இருந்தது. ஆட்டத்தின் 43–வது ஓவரில் டோனி ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஜடேஜா வெளியேறினார். அவர் 5 ரன்கள் எடுத்தார்.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை அவர் எந்த இலக்கும் இல்லாமல் முன்னால் வந்து தேவையில்லாமல் தூக்கி அடித்தார். இதனால் கேட்ச் ஆனார். இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி கூறியதாவது:– ஜடேஜா இப்படி ஒரு ஷாட்டை ஆட வேண்டிய அவசியம் என்ன?… அவர் ஏன் அப்படி ஆடினார் என்று அவரிடம் கேட்பது அவசியம். 7 ஒவர் விளையாட வேண்டி இருக்கும் போது அவர் அப்படி ஆடியது தவறாகும். இது மாதிரியான போட்டிகளில் அவர் பொறுப்புடன் ஆட கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் ஒரு நல்ல வீரராக திகழமுடியும். இந்த ஷாட் குறித்து ஜடேஜாவிடம் அணி நிர்வாகம் விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: