மூன்று புதிய வேடங்களில் ‘விஜய் 58’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்?…

விளம்பரங்கள்

சென்னை:-சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தில் படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூன்றாம் கட்ட படபிடிப்பு வேகமாக சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் நடனக்காட்சி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதில் 150 நடனக்கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் விஜய் புதிய கெட்டப்பில் தோன்றுவதால் மிகவும் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும், இதற்கு மாஸ்டர் ராஜசுந்தரம் தான் நடனம் அமைக்கிறாராம். புலி படத்தின் படப்பிடிப்பு பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: