ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள்.

அந்த பணத்தை வாங்கிக்கொள்ளுமாறும், அக்காட்சியை கேமராவில் பதிவு செய்து, அவர்களை அம்பலப்படுத்துமாறும் என் கட்சி தொண்டர்களை நான் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.
‘ஆம் ஆத்மி’யின் மற்றொரு தலைவர் மனிஷ் சிசோடியா கூறுகையில், எங்கள் கட்சிக்கு வேலை செய்யாமல் இருப்பதற்காக, எங்கள் கட்சியினருக்கு பா.ஜனதா தலைவர்கள் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: