100-வது நாள் கடந்து சாதனைப் படைத்த கத்தி – ஒரு பார்வை!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தி. தன்னை சுற்றி வரும் சர்ச்சை அனைத்திற்கும் மௌனத்தை மட்டும் பதிலாக தந்து, பாக்ஸ் ஆபிஸில் ருத்ர தாண்டவம் ஆடுவது இவரது ஸ்பெஷல். இந்நிலையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு விஜய் இரட்டை வேடங்களில் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை அபகரிப்பதை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. இருந்தாலும், அதையெல்லாம் மீறி இப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்தது. இதுவரை வந்த விஜய் படங்களிலேயே இந்த படம்தான் அதிக வசூல் செய்தது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து 100 நாட்கள் ஆகியுள்ளது. சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் மட்டும் இப்படம் 100 நாட்கள் ஓடியுள்ளது.

‘கத்தி’ படம் 100-வது நாளை தொட்டுள்ளதைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கும், படத்தின் தயாரிப்பாளருக்கும், படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், அவருடைய உதவி இயக்குனர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் இனியதமிழ் சார்பாக ‘கத்தி‘ படகுழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: