செய்திகள் வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!…

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!…

வீட்டின் வெளியே கொட்டி கிடந்த பனிக்கட்டியை அகற்றாத ஜான்கெர்ரிக்கு அபராதம்!… post thumbnail image
போஸ்டன்:-அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், ரோடுகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் பீகான் மனு பகுதியில் பிங்க்னீ தெருவில் உள்ளது. அங்கு அவரது வீட்டின் முன்பு அதிக அளவில் பனி கொட்டிக்கிடந்தது.
அதை அகற்ற அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பாஸ்டன் நகர நிர்வாகம் மந்திரி ஜான் கெர்ரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தது. அதை அவர் முறைப்படி செலுத்தி விட்டார். இந்த தகவலை கெர்ரியின் செய்தி தொடர்பாளர் கிளன் ஜான்சன் தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவம் நடந்தபோது ஜான் கெர்ரி பாஸ்டன் நகரில் இல்லை. சவுதிஅரேபியாவில் மன்னர் அப்துல்லா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவுடன் அவர் பங்கேற்று இருந்தார். அதிபருடன் புதிய மன்னரையும் சந்தித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி