செய்திகள்,திரையுலகம் புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…

புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…

புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்… post thumbnail image
டெல்லியில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் எண்ணைய் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார் பிரமிட் நடராஜன். இவருடைய நிறுவனத்தில் 15 என்ஜினீயர்கள் இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள். ஒருநாள் அவர்கள் கடலுக்குள் அடியில் பல கோடி மதிப்பிலான பெட்ரோல் இருப்பதை கண்டறிகிறார்கள். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார் பிரமிட் நடராஜன். ஆனால், அதற்குள் இந்த விஷயம் பெரிய தொழிலதிபரான ஆர்.கே.வின் காதுக்கு சென்றடைகிறது. ஆர்.கே. இதுகுறித்து பிரமிட் நடராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருவரும் இணைந்து பல கோடி மதிப்பிலான பெட்ரோல் கிணற்றை அபகரிக்க நினைக்கிறார்கள். மேலும், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கவும் நினைக்கிறார்கள்.

ஆனால், பெட்ரோல் கிணறை கண்டுபிடித்த என்ஜினீயர்கள் மூலம் விஷயம் கசிந்துவிடக்கூடும் என்று, என்ஜினீயர்களிடம் இந்த திட்டத்தை கைவிடப்போவதாக பிரமிட் நடராஜன் கூறுகிறார். ஆனால், என்ஜினீயர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கடைசியில், மத்திய அரசிடம் பேசி இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை பெற்றுக்கொண்டு பின் திட்டத்தை தொடங்குவோம். அதுவரை குலுமணாலிக்கு அனைவரும் சுற்றுலா சென்று வாருங்கள் என தனது செலவில் அவர்களை சுற்றுலாவுக்கு அனுப்புகிறார் பிரமிட் நடராஜன். அதன்படி, என்ஜினீயர்கள் அனைவரும் குலுமணாலிக்கு ஒரு பேருந்தில் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு, பிரமிட் நடராஜன் சதித்திட்டம் தீட்டி, அவர்களை ரவுடி ஆனந்த்ராஜ் உதவியுடன் மலையில் இருந்து பஸ்ஸை கீழே விழ வைத்து கொல்கிறார். இது விபத்துதான் என்று அனைவரையும் நம்பவும் வைக்கிறார்கள். ஆனால், இந்த விபத்தில் இருந்து ஒரெயோரு பெண் என்ஜினீயர் மட்டும் தப்பிக்கிறாள்.

டெல்லி திரும்பும் அவரை பிரமிட் நடராஜனின் அடியாட்கள் மோப்பம் பிடித்து சுட்டு வீழ்த்துகிறார்கள். குண்டடிபட்ட அவரை கமிஷனரான பிரசாந்த் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார். அவளை பிரமிட் நடராஜனின் அடியாட்கள் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்துவிடுகிறார்கள். இந்த கொலையை புலன்விசாரணை செய்கிறார் பிரசாந்த். இந்த விசாரணையில் ஆர்.கே., மற்றும் பிரமிட் நடராஜன் ஆகியோர் என்ஜினீயர்கள் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதை அறிந்துகொண்ட ஆர்.கேவும், பிரமிட் நடராஜனும் பிரசாந்தின் குடும்பத்தையே தீர்த்துக் கட்டுகிறார்கள். இதில் பிரசாந்த் மட்டும் தப்பிக்கிறார்.அதன்பின்னர் பிரசாந்த் தனது குடும்பத்தை கொன்றவர்களையும், குற்றவாளிகளையும் பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. பிரசாந்த் படம் முழுக்க ஆக்க்ஷன் ஹீரோவாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு இரண்டு நாயகிகள் இருந்தாலும் அவர்களுடன் ரொமான்ஸ் செய்ய நேரம் ஒதுக்கவில்லை. படத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார். போலீசுக்குண்டான மிடுக்குடன் ரசிக்க வைக்கிறார்.

நாயகியான கார்த்திகா மேத்யூவுக்கு படத்தில் காட்சிகள் ரொம்பவும் குறைவு. அதையும் நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் வில்லனாக வரும் ஆர்.கே. வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். பிரமிட் நடராஜன், மன்சூர் அலிகான், ராதாரவி ஆகியோர் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆர்.கே.செல்வமணி 3 வருடத்திற்கு முன்பு எடுத்த படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார். சட்டம் பணம் படைத்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் பொதுவானதாக இல்லை. பணம் படைத்தவர்கள் சட்டத்தை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்கிறார்கள். அதற்கு அரசியல்வாதிகளும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை துணிச்சலாக சொல்ல வந்த இயக்குனரை பாராட்டலாம். ஜோஸ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இராஜராஜனின் ஒளிப்பதிவில் சண்டைக் காட்சிகள் அபாரம்.

மொத்தத்தில் ‘புலன் விசாரணை 2’ திறமை……………..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி