மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370 விபத்துக்குள்ளானதாக அறிவிப்பு!… பயணிகளும் இறந்ததாக அறிவிப்பு….

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற எம்.எச்.370 பயணிகள் விமானம் ரேடார் சிக்னலிலிருந்து மறைந்தது. 2014ம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இப்பணியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டன. இருந்தும் விமானத்தின் உதிரிபாகங்களோ அல்லது விபத்தில் இறந்தவர்களின் உடலோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஏற்கனவே விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விமானத்தை தேடும் பணி கைவிடப்பட்டதாகவும். விமானத்தில் பயணித்த 239 பயணிகளும் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரபூர்வமான அறிவிப்பை மலேசிய ஏர்லைன்ஸ் மூத்த அதிகாரிகள் வெளியிட்டனர். தங்களது உறவினர்களின் உடல் கூட கிடைக்காத துயரத்தில் இருந்த 239 பயணிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவர்களது மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: