கோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வழிபாடு!…

விளம்பரங்கள்

சென்னை:-ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் கடந்த அக்டோபர் மாதம் ரிலீசானது. இப்படம் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் குவித்தது. முந்தைய பல படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்தது.

கத்தி படம் 100–வது நாளாக ஒடிக்கொண்டு இருக்கிறது. இதையடுத்து ரசிகர்கள் 100–வது நாள் விழாவை கொண்டாடினார்கள். வடபழனி முருகன் கோவிலில் விஜய் மக்கள் இயக்க மாநில துணை செயலாளர் குமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்களுக்கு லட்டுகளும், வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர்கள் அப்புனு, தாமு, கட்பீஸ் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமார், திருவள்ளூர் மாவட்ட தலைவர் அம்பத்தூர் பாலமுருகன், காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் ஆகியோர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: