அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…

இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!…

இந்தியாவுடன் இயல்பான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது – நவாஸ் ஷெரீப்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து பேசினார்.அப்போது இந்திய-பாகிஸ்தான் இடையே நிலவும் உறவு நிலைமை குறித்து நவாஸ் ஷெரீப்பிடம், அப்துல் பாசித் எடுத்துக்கூறினார். இருவருடைய சந்திப்புக்கு பின்பும் பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நவாஸ் ஷெரீப் கூறியிருப்பதாவது:-

நமக்கு அருகாமையில் உள்ள மிகவும் முக்கியமான, நமக்கு வேண்டிய நாடு இந்தியாவாகும். பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மையில் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நமது இரு நாடுகளிடையேயும் இயல்பான உறவு நிலவிடவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.
இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் பாகிஸ்தான் நல்லமுறையில் நட்புறவு கொள்ளவே விரும்புகிறது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய-பாகிஸ்தான் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையுடன் கூடிய அமைதியான சூழல் நிலவிடவேண்டும் என்றால் இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்.குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டியது அவசியமானது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி