அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிகமாக திரட்ட முடியும் என எதிர்பார்க்கிறது.

3 ஜி என்னும் மூன்றாம் தலைமுறை தொலை தொடர்பு சேவை வழங்கத்தக்க 2,100 மெகாஹெர்ட்சு பேன்டுகளுடன், 2 ஜி மொபைல் காற்றலைகளை 3 வெவ்வேறு பிரிவில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் மார்ச் 4ம் தேதி நடக்க உள்ளது.

2 ஜி மற்றும் 3 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் மத்திய அரசு ரூ.82 ஆயிரத்து 395 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் மொத்தமாக ரூ.1 லட்சம் கோடி திரட்ட ஏற்ற வகையில் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: