செய்திகள் வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!…

வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!…

வெள்ளை மாளிகையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்த போது, அதிகாலை 3.08 (உள்ளூர் நேரம்) மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. உஷாரான அதிகாரிகள் உடனடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள புல்வெளியில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இந்த இடத்தில் தான் அதிபர் ஒபாமாவின் விமானம் இருக்கும் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

‘குவாட் காப்டர்’ எனும் வகையை சேர்ந்த 2 அடி குறுக்களவு கொண்ட அந்த விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் அது உளவு விமானம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், சரியாக 9.30 மணியளவில் வெள்ளை மாளிகைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தான் இயக்கிய விமானம் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதி வெள்ளை மாளிகையின் உள்ளே விழுந்து விட்டதாக தெரிவித்தார்.

அரசு ஊழியரான அவர் பொழுதுபோக்கிற்காக அந்த விமானத்தை இயக்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் வெள்ளை மாளிகை வேலியைக்கடந்து உள்ளே நுழைய முயற்சித்த ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டார். சமீப காலமாக இது போன்ற பாதுகாப்பு தோல்விகளால், வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி