செய்திகள்,முதன்மை செய்திகள் குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…

குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!…

குடியரசு தின அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறவில்லை!… post thumbnail image
புதுடெல்லி:-அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த தனுஷ், ஆகாஷ் மற்றும் பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் கடந்த காலங்களில் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றிருக்கும். ஆனால் நேற்றைய அணிவகுப்பில் இந்த ஏவுகணைகள் இடம் பெறவில்லை.

இதற்கு அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமா? என கேட்டதற்கு, ‘கொஞ்சம், சரி’ என பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், இந்த ஏவுகணைகள் இடம் பெற்றால் அது, ஒபாமாவுக்கு அசவுகரியமாக இருக்கலாம் என அவர்கள் (அமெரிக்கா) தெரிவித்தனர் என்று கூறினார்கள்.

எனினும் இது குறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் சிதான்சு கர் கூறும் போது, இந்த சொத்துகள் (அணு ஏவுகணைகள்) அனைத்தும் கடந்த காலங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை உலகமும் பார்த்துள்ளது. இவை இல்லாத அணிவகுப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். அணிவகுப்பில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம்பெற்றால், இந்தியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரித்ததாக ஆகிவிடும் என எண்ணியே, அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி