உலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்!…

விளம்பரங்கள்

வாஷிங்டன்:-பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டும் உலக அளவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இன்று முடங்கியது. அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏறத்தாழ அரை மணி நேரத்திற்கு மேலாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை இணையத்தில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கம் போல வலைதளத்தில் நுழைந்தவர்களுக்கு பேஸ்புக் சர்வரில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும், மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. மிக விரைவில் நிலைமையை சீர்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்ற தகவலை மட்டும் ஃபேஸ்புக் வெளியிட்டது.
சொன்னது போன்றே விரைவில் அந்தக் கோளாறை சரி செய்தது. ஆனால் அதற்குள் மற்றொரு முக்கிய சமூக வலைதளமான ட்விட்டரை நோக்கி இணையவாசிகள் படையெடுத்தனர். அதில் ஒருவர் பேஸ்புக் டவுன் ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். காரணம் அப்போதுதான் எல்லோரும் ட்விட்டருக்கு வந்து ஜோக் அடிப்பார்கள் என்கிறார். இதைப் பற்றி பேசுவதற்காக #facebookdown என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கினார்.

உலக அளவில் இணையதளம் மட்டுமின்றி, மொபைல் அப்ளிகேஷன்களிலும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியிருந்தது. தற்போது இந்த சேவைகள் மீண்டும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ள நிலையில் முடக்கத்திற்கான காரணம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: