செய்திகள்,விளையாட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!…

9 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!…

9 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!… post thumbnail image
போர்ட் எலிசபெத்:-தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டிவில்லியர்ஸ் (19 ரன்), பிளிஸ்சிஸ் (4 ரன்), ரோசவ் (4 ரன்) ஏமாற்றிய நிலையில் டேவிட் மில்லர் (130 ரன், 133 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) சதம் அடித்து அணி சவாலான ஸ்கோரை எட்ட வித்திட்டார்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் வெய்ன் சுமித் (0), கெய்ல் (10 ரன்) வழக்கம் போல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதன் பின்னர் சாமுவேல்ஸ் (68 ரன்), டேரன் சேமி (51 ரன்) அணி இலக்கை நோக்கி பயணிக்க உதவினர். என்றாலும் ஒரு பக்கம் விக்கெட் சரிந்த நிலையில் 8-வது வரிசையில் களம் புகுந்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் தனிநபராக போராடி தென்ஆப்பிரிக்காவுக்கு ‘செக்’ வைத்தார். அப்போட்டின் பந்தில் இமாலய சிக்சர் விரட்டி வெஸ்ட் இண்டீசுக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்த ரஸ்செல் 64 ரன்களுடன் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் நின்றார். வெஸ்ட் இண்டீஸ் 48.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்தது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக 2006-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வியும், ஒன்றில் ‘டை’யும் வெஸ்ட் இண்டீஸ் அணி சந்தித்து இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி