மலேசிய ஏர்லைன்ஸ் இணையதளம் முடக்கம்!…

விளம்பரங்கள்

கோலாலம்பூர்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு சோதனையாக அமைந்தது. இந்த ஆண்டும் அதே சோதனை தொடர்கிறது. மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா நோக்கி 227 பயணிகளுடன் சென்ற இந்த நிறுவனத்தின் எம்.எச்.370 என்ற விமானம் மாயமானது.இதேபோல், கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்தில் இருந்து மலேசியா நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைன் & ரஷிய எல்லைப்பகுதியில் சென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள் உயிரிழந்தனர்.

தற்போது மலேசிய ஏர்லைன்சின் இணையதளம் முடக்கபட்டு உள்ளது. இதனை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முடக்கி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இணையதளத்தை திரும்ப பெரும் முயற்சியில் அதிகாரிகள தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். முதலில் ஏர்லைன்சின் இணையதளம் மாற்றபட்டது முதலில் 404 – விமானம் கிடைக்கவில்லை என அதில் தகவல் வெளியிடபட்டது. மேலும் அதில் 3 அடையாளம் தெரியாத டுவிட்டர் கணக்குகளும், ஒரு ராப் பாடலும் இடம்பெற்று இருந்தது. இணையதளம் ஐ.எஸ்.ஐஎஸ் தீவிரவாதிகளின் சைபர் குரூப்பால் முடக்கபட்டது. பின்னர் அதில் ஒரு பல்லியின் படம் இடம் பெறறது.பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் குறிப்பு நீக்கபட்டு பல்லி அணி அதிகார பூர்வ ஐ.எஸ் சைபர்பிரிவு என குறிப்பிடபட்டது.

இதே பல்லி பிரிவு தான் கடந்த வருடம் சோனி ஆன் லைன் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க்கை தகர்த்ததற்கு பின்னால் இருந்ததாக கூறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிர்வாகம் விரைவில் இது சரி செய்யபடும் என்றும் பயனர்கள் முடக்கபட்ட இணையதளத்தில் இருந்து திருப்பி விடபட்டு உள்ளனர். 22 மணி நேரத்தில் இணையதளம் சரி செய்யப்படும் எனகூறி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: