அரசியல்,செய்திகள் சவூதி அரேபியாவின் இளவரசர் புதிய மன்னராகிறார்…

சவூதி அரேபியாவின் இளவரசர் புதிய மன்னராகிறார்…

சவூதி அரேபியாவின் இளவரசர் புதிய மன்னராகிறார்… post thumbnail image
ரியாத் :- சவூதி அரேபியாவின் ஆறாவது மன்னராக 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்துல்லா பதவியேற்றார். தனது ஆட்சிக்காலத்தில் சவூதி அரேபியாவில் பல புரட்சிகரமான மாற்றங்களை அவர் கொண்டு வந்தார். 1923 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 90 வயதாகிறது. கடந்த 3 வாரங்களாக நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்த மன்னர் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து சவூதி அரேபிய மன்னரின் மரணத்திற்கு இந்திய பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தங்களின் வழிகாட்டியை சவூதி அரேபியா இழந்து நிற்கும் இவ்வேளையில் அந்நாட்டு மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக மோடி டுவிட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அப்துல்லாவின் குடும்பத்தினர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இவருடைய மரணத்தினை அடுத்து தற்போது இளவரசராக உள்ள சல்மான் பின் அப்துல் அஜீஸ், புதிய மன்னராக பதவி ஏற்கிறார். அவர் தனது சகோதரர் முக்ரின்னை இளவரசராக அறிவித்துள்ளார்.

மன்னராக பதவியேற்க உள்ள சல்மானின் வயது 79. 2012 ஆம் ஆண்டு முதல் இளவரசராகவும் பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்துள்ள இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் கவர்னராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி