செய்திகள்,திரையுலகம் ஒரு நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை..!

ஒரு நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை..!

ஒரு நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை..! post thumbnail image
ஒரு படம் முன்பெல்லாம் 100 நாட்கள் ஓடினால் தான் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும். ஆனால், இன்று 3 நாட்கள் நன்றாக ஓடினாலே போதும், போட்ட பணத்தை எடுத்து விடலாம். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியம். முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்…

லிங்கா :- சூப்பர் ஸ்டார் தான் எப்போதும் முதலிடம், அவர் சாதனையை முறியடிக்க மீண்டும் அவரே, ஒரு படம் நடித்தால் தான் முடியும் போல. அந்த வகையில் சமீபத்தில் வந்த ‘லிங்கா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ 37 கோடி.

கத்தி :- சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கொள்ளையடிப்பவர் இளையதளபதி விஜய் தான். இவரது நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த கத்தி முதல் நாள் மட்டும் ரூ 23.80 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அஞ்சான் :- 2014இல் மாபெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த படம் அஞ்சான். அந்த எதிர்ப்பார்ப்பின் காரணமாகவே இப்படத்தின் வசூல் முதல் ரூ 15.1 கோடி வரை வந்தது. ஆனால், பிறகு ஏற்ப்பட்ட மோசமான விமர்சனங்களால் வசூல் குறைய ஆரம்பித்து விட்டது.

சிங்கம் – 2 :- சிங்கம் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக வெளிவந்த சிங்கம்-2வின் முதன் நாள் வசூல் ரூ 13 கோடி. இப்படம் மலேசியாவின் பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் :- சூப்பர் ஸ்டார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் எந்திரன் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 11.25 கோடி. தற்போது வரை இப்படத்தின் முழு வசூலை எந்த படமும் நெருங்க கூட முடியவில்லை.

ஆரம்பம் :- தல என்றாலே கிங் ஆப் ஓப்பனிங் தான். அந்த வகையில் ஆரம்பம் திரைப்படம் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி. இப்படத்துடன் இன்னும் 2 பெரிய படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா :- விஜய் கேரளா மார்க்கெட்டை குறிவைத்து எடுத்த படம் ஜில்லா. இப்படத்தில் மோகன் லால் நடித்தது பெரிதும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 10 கோடி என கூறப்படுகிறது.

வீரம் :- ஜில்லாவிற்கு போட்டியாக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் வீரம். இப்படம் பி, சி செண்டர்களில் வசூலை வாரி குவித்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 9.3 கோடி.

துப்பாக்கி :- விஜய்யின் கேரியரிலேயே மிகவும் முக்கியமான படம் துப்பாக்கி. இப்படம் 180 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 9.25 கோடி.

கோச்சடையான் :- ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்தனை எதிர்ப்பார்ப்பா? என்றால் அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் தான். அவரின் குரலுக்காகவே இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 9 கோடி. ஆனாலும் போக போக படத்தின் வசூல் குறைய, படம் தோல்விப்படமானது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி