அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் 11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…

11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!…

11.5 கோடி வங்கிக் கணக்குகள்: மோடியின் ஜன்தன் யோஜனா புதிய உலக சாதனை!… post thumbnail image
புது டெல்லி:-மத்திய, மாநில அரசுகளின் மானியங்களின் பலன்களை நேரடியாக பெறவும், குடும்பத்துக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கவும் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று அறிவித்தார். வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் ஏழரை கோடி மக்களை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 28-8-2014 அன்று டெல்லியில் ஜன்தன் யோஜனாவை பிரதமர் தொடங்கி வைத்தார்.

தொடங்கப்பட்ட ஐந்தே மாதங்களில் பதினொன்றரை கோடி மக்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக புதிய வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது. மேற்படி கணக்குகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அரசின் சார்பில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, குறுகிய காலத்துக்குள் அதிகமான வங்கிக் கணக்குகளை தொடங்கிய சாதனைக்குரிய திட்டமாகவும் ஜன்தன் யோஜனா ‘கின்னஸ் சாதனை’ புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதியில் இருந்து 29-ம் தேதிக்குள் (6 நாட்களில்) நாடு தழுவிய அளவில் ஒரு கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 130 பேருக்கு வங்கிக் கணக்குகளை தொடங்கியதன் மூலம் இந்திய அரசின் நிதி சேவைகள் துறை புதிய உலக சாதனையை படைத்துள்ளதாக கின்னஸ் நிறுவனம் இந்திய அரசுக்கு அளித்துள்ள சான்றிதழ் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி