செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!…

குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!…

குள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்!… post thumbnail image
வாஷிங்டன்:-சூரிய மண்டலத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ளது சீரீஸ் என்னும் குள்ள கிரகம். இது எரிகற்கள் பாதையில் அமைந்து உள்ளது. சீரீஸ் குறுக்களவு 950 கிலோ மீட்டர். வெஸ்டா குறுக்களவு 525 கிலோ மீட்டர். (இவற்றுடன் ஒப்பிட்டால் பூமியின் குறுக்களவு 12,756 கிலோ மீட்டர். சந்திரனின் குறுக்களவு சுமார் 3500 கிலோ மீட்டர்)சீரீஸ் 43 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.இதுபோன்ற குட்டி கிரகங்கள் அதிக அளவில் உள்ளன. இதனை விஞ்ஞானிகள் விண்கற்கள் என குறிப்பிடுகின்றனர்.

விஞ்ஞானிகளுக்கு இது போன்ற விண்கற்களை ஆராய்வதில் தனி ஆர்வம் உண்டு. இவை அனைத்தும் சூரிய மண்டலம் தோன்றிய போது அதாவது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உண்டானவை. அவை அன்று இருந்தது போல இன்றும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆகவே இது போன்ற சிறிய கிரகங்களை ஆராய்ந்தால் பூமி மற்றும் பெரிய கிரகங்களின் தோற்றம் பற்றி மேலும் அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் வெஸ்டா, சீரீஸ் ஆகிய இரு விண்கற்களை ஆராய 2007 ஆம் ஆண்டில் டான் என்ற விண்கலத்தை அனுப்பியது. டான் 2011 ஜூலை 15ம் தேதி வாக்கில் வெஸ்டாவுக்குப் போய்ச் சேர்ந்தது.டான் ஓராண்டுக் காலம் வெஸ்டாவை சுற்றி வந்து ஆராய்ச்சி செய்து பல தகவல்களை சேகரித்து அனுப்பியது. வெஸ்டாவிலிருந்து டான் தனது ஆய்வை முடித்துக் கொண்டு அடுத்து சீரீஸ் சென்று உள்ளது. 2015 பிப்ரவரி வாக்கில் அடைந்து அதனை ஆராய்த் தொடங்கும்.

அதற்கு முன்னதாக டான் இந்த குள்ள கிரகத்தினுடைய 3 மடங்கு தெளிவான படங்களை கடந்த டிசம்பர் மாதம் படம் பிடித்து அனுப்பி உள்ளது.சீரீஸ் குள்ள கிரகத்தின் சிறந்த படங்களை கடந்த 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டு நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கி படம் பிடித்து உள்ளது.
டான் விண் கலம் ஹப்பிள் எடுத்த படங்களை விட 80 சதவீதம் தெளிவான படங்களை சமீபத்தில் ஜனவரி 13ம் தேதி எடுத்து அனுப்பி உள்ளது.அடுத்த சில வாரங்களாக தொடர்ந்து டான் குள்ள கிரகம் குறித்த தெளிவான பல படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. சிரீஸ் கிரகத்தின் சுற்றுப்பாதையை டான் விண்கலம் மார்ச் 6ம் தேதி சென்றடையும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி