அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!…

அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது – ஒபாமா!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்க செனட் சபையில் அதிபர் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அமெரிக்க பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 1999ம் ஆண்டு முதல் வேகமான வேகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நமது வேலைவாய்ப்பின்மை சதவீதம் முன்பைவிட குறைந்துள்ளது. அமெரிக்கா வளர்ச்சி அடைவதற்கான சாதகமான சூழ்நிலை தற்போது நிலவுகிறது. கடினமாக உழைப்போருக்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திதர வேண்டும்.

கச்சா எண்ணை மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. நாம் தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறோம். நம்முடைய அதிகமான குழந்தைகள் முன்எப்போதும் இல்லாத வகையில் பட்டாதாரிகளாக உள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது மக்கள் காப்பீடு செய்தவர்களாக உள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில், நமது தொழில்துறை சுமார் 11 மில்லியனுக்கும் மேலான வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடத்தில் மட்டுமே காப்பீடு செய்யாத சுமார் 10 மில்லியன் அமெரிக்கர்கள் இறுதியாக சுகாதார பாதுகாப்பு பெற்றுள்ளனர். சுகாதார காப்பீடு மூலம் மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் மனதில் தற்போது அமைதி நிலவுகிறது. அவர்கள் ஒபாமாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். என்று கூறினார். தொடர்ந்து ஒபாமா முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி