அஜித் ரசிகர்களிடம் சரண்டர் ஆன நடிகர் விஷால்!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஷால் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ‘ஆம்பள’. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைப்பெற்றது. இதில் விஷால் மிகவும் பணிவுடனே பேசினார். ஏனெனில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ஆர்யா, எவனா இருந்தாலும் வெட்டுவேன் என்று விஷால் கூறியதாக சொல்லிவிட்டு சென்றார்.

இந்த பொங்கலுக்கு என்னை அறிந்தால் படம் வருவதாக இருந்து பிறகு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஷாலை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் கோபத்தில் கலாய்த்து தள்ளி விட்டனர். நேற்று விஷால் பேசுகையில், நான் அப்படி எல்லாம் கூறவே இல்லை, எந்த படம் பொங்கலுக்கு வருகிறது என்று எனக்கே தெரியாது, அந்த தேதியில் படம் வரவேண்டும் என்பது எனது ஆசை மட்டுமே என கூறி அஜித் ரசிகர்களிடம் சமாதானமானார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: