செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…

தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!…

தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை .25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக பெரும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இன்றைய பங்குவர்த்தகத்தின் போது தேசிய பங்குச்சந்தை நிப்டி வரலாறு காணாத உயர்வை சந்தித்தது. இன்று வர்த்தகம் தொடங்கியதிலிருந்து 80 புள்ளிகள் வரை உயர்ந்து 8629.85 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை நிப்டி தொட்டது.

அதே போல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 28,500 புள்ளிகளாக உயர்ந்தது. இன்னும் 300 புள்ளிகள் உயர்வை சந்தித்தால் சென்செக்சும் பங்குச்சந்தை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொடும். இன்றைய பங்குவர்த்தகத்தின் போது 1557 நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வையும், 1142 நிறுவனத்தின் பங்குகள் விலை குறைவையும் சந்தித்தன.

300 நிறுவனத்தின் பங்குகள் எந்த மாற்றத்தையும் சந்திக்காமல் இருந்தது. அதிகபட்சமாக செசா ஸ்டெர்லைட் நிறுவன பங்குகளின் விலை 5.07 சதவீத உயர்வை சந்தித்தது. வங்கித்துறை மற்றும் உருக்கு துறை ஆகிய பங்குகளின் விலை நல்ல உயர்வை சந்தித்தன. வாகன உற்பத்தித்துறை விலை சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி