செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது!…

பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது!…

பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது!… post thumbnail image
புதுடெல்லி:-கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது. இந்த நிலையில் கச்சா எண்ணெயை மற்ற நாடுகளுக்கு வழங்குவதில் சவுதி அரேபியாவுக்கும் சில நாடுகளுக்கும் இடையில் போட்டி ஏற்பட்டது. குறிப்பாக அமெரிக்காவும், ரஷியாவும் புதிய போட்டியாளர்களாக உருவெடுத்தன. இதைத் தொடர்ந்து போட்டியை சமாளிக்க சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைத்தது. கடந்த 6 மாதமாக இந்த விலை குறைப்பு கொஞ்சம் கொஞ்சமாக நீடித்தபடி உள்ளது. நேற்று யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 45 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சி சர்வதேச பொருளாதாரத்தில் மீண்டும் மந்த நிலையை உருவாக்கி கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆதாயம் தரும் அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 45 டாலராக குறைந்துள்ளதால் இந்தியாவில் இறக்குமதி செலவும், மானியச் சுமையும் கணிசமாக குறைந்து விட்டது. இது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிக லாபத்தை அள்ளி கொடுப்பதாக மாறியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை குறைக்கப்படலாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விலை குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை 7 தடவை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.13 வரை குறைந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 வரை குறைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இது அந்த நாட்டில் மட்டும் தற்போது இரட்டிப்பு அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த உற்பத்தி அதிகரிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறையக்கூடும். அப்படி குறையும்பட்சத்தில் அது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சாதக – பாதகங்களை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் புகழ் பெற்ற வால் ஸ்டிரிட் வங்கிகள், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 40 டாலர் வரை வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளது என்று கூறி உள்ளது. அப்படி கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரும் மாதங்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.ஆனால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால், அது இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது இந்தியாவின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்கிடையே வரும் ஜூன் மாதத்துக்குப் பிறகு தான் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்று கூறப்படுகிறது. அதன் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையும் என்று கூறப்படுகிறது. அதன் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும். அதுவரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மக்கள் மகிழ்ச்சி அடையும்படி கட்டுக்குள் இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி