செய்திகள்,விளையாட்டு பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!…

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!…

பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுகிறார் லயோனல் மெஸ்சி!… post thumbnail image
சூரிச்:-அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா கிளப் அணியின் மானேஜர் லூயிஸ் என்ரிக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த கிளப்பில் இருந்து வெளியேற முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால் இதனை மெஸ்சி உடனடியாக மறுத்தார்.

இந்த நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த மெஸ்சி திடீரென பல்டி அடித்துள்ளார். அடுத்த ஆண்டு நான் எங்கு இருப்பேன் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறுவதை மெஸ்சி சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி