செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை ரூ.24 கோடி!…

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை ரூ.24 கோடி!…

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகை ரூ.24 கோடி!… post thumbnail image
துபாய்:-11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்தப்போட்டியில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். உலக கோப்பை போட்டிக்கான பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.79 கோடியாகும். இது கடந்த முறையை விட 30 சதவீதம் கூடுதலாகும். 2007–ம் ஆண்டு உலககோப்பையுடன் ஒப்பிடுகையில் பரிசு தொகை 2 மடங்காகும்.

2015 உலககோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 24 கோடி பரிசு வழங்கப்படும். 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும். அரை இறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.5.4 கோடியும், கால் இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி