செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’வால் நடிகை அனுஷ்காவுக்கு நஷ்டமாம்!…

‘லிங்கா’வால் நடிகை அனுஷ்காவுக்கு நஷ்டமாம்!…

‘லிங்கா’வால் நடிகை அனுஷ்காவுக்கு நஷ்டமாம்!… post thumbnail image
சென்னை:-நடிகை அனுஷ்கா பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் கஷ்டப்பட்டு லிங்கா படத்திற்காக கால்ஷீட் கொடுத்தாராம். அந்த சமயத்தில் விஜய், விஷால், கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த வாய்ப்புகளையெல்லாம் ஒதுக்கி விட்டு லிங்கா படத்தில் நடித்துக் கொடுத்தார்.

படம் வெளிவந்ததும், அனுஷ்காவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் அனுஷ்கா ரொம்பவே வெறுத்துப் போய் விட்டாராம். ஒழுங்காக அந்தப் படங்களிலாவது நடித்திருக்கலாம். பெரிய இயக்குனர், பெரிய நடிகர் என்று நடித்தது தப்பாகப் போய்விட்டது என்று நிறையவே வருத்தப்பட்டாராம். அந்தப் படங்களில் நடிக்காததன் மூலம் அனுஷ்காவுக்கு சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படங்களில் நடித்திருந்தால் கோடிகளை அள்ளியிருக்கலாமே என்றும் இப்போது அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி