அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…

பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!…

பிரதமர் மோடிக்கு ஜான் கெர்ரி பாராட்டு!… post thumbnail image
காந்திநகர்:-குஜராத் மாநிலம் காந்தி நகரில், ‘எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’ நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி இந்தியாவுக்கு வந்துள்ளார். காந்தி நகரில், அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, முதலீட்டாளர்களுக்கு சாதகமான கொள்கைகளால், குஜராத்தை முன்உதாரண மாநிலமாக மாற்றினார். அதை நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்றினால், நாம் அனைவரும் பயன் அடைவோம்.

கடந்த இரண்டு நாட்களாக, எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்து வருவது என்னை கவர்ந்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, பல நாடுகளின் முதலீட்டாளர்களும் குஜராத் அரசுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.இருதரப்பு உறவு பற்றிய பேச்சுவார்த்தையிலும், ஒபாமா வருகைக்கான ஏற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு, ஒபாமா பெருமைப்படுகிறார். இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, தீவிரவாதம், கடற்கொள்ளை, கடல்சார் பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, அணு ஆயுத பரவல் தடை ஆகிய விவகாரங்களிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆர்வமாக இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், பாரீசில், பருவநிலை மாற்றம் தொடர்பாக, இந்தியா-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கருதுகிறோம். இதுபற்றியும் நரேந்திர மோடியும், ஒபாமாவும் பேச்சு நடத்துவார்கள்.

இலங்கையில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இத்தகைய சவால்களுக்கு தீர்வு காண இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். புதிய இலங்கை அதிபருடன் நான் பேசினேன். சவால்கள் இருந்தபோதிலும், அங்கு தேர்தல் நடந்து, புதிய அரசை மக்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம். இது ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிவகுக்கும்.இவ்வாறு ஜான் கெர்ரி கூறினார்.காந்தி நகரில், எழுச்சிமிகு குஜராத் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜான் கெர்ரி பேசியதாவது:- அமெரிக்காவும், இந்தியாவும் இருதரப்பு உறவில் முதலீடு செய்துள்ளன. ஆரோக்கியமான, பாதுகாப்பான, வளமான எதிர்காலத்தை உருவாக்கி, இந்த உறவை வலுப்படுத்துவோம். பருவநிலை மாற்றம், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு, பொருளாதார கூட்டுறவு ஆகிய விவகாரங்கள் குறித்து ஒபாமாவும், மோடியும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி அளிக்கும் பிரதமர் மோடியின் திட்டத்துக்காக அமெரிக்காவும் பணியாற்ற முடியும். இவ்வாறு ஜான் கெர்ரி பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி