செய்திகள்,திரையுலகம் நடிகர் ஜெய்யின் அஜித் சென்ட்டிமெண்ட்!…

நடிகர் ஜெய்யின் அஜித் சென்ட்டிமெண்ட்!…

நடிகர் ஜெய்யின் அஜித் சென்ட்டிமெண்ட்!… post thumbnail image
சென்னை:-தன்னை தல ரசிகர் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளும் நடிகர் ஜெய், அஜித் படம் வெளிவரும் மாதத்தில் தன் படமும் வெளிவந்தால் வெற்றியடையும் என்று நம்புகிறாராம். அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸானது. மங்காத்தா படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து சரவணன் இயக்கத்தில் ஜெய் நடித்த எங்கேயும் எப்போதும் படம் செப்டம்பர் 16ம் தேதி வெளியிடப்பட்டது.

இப்படம் ஜெய்க்கும் மிகப்பெரியவெற்றிப்படமாக அமைந்தது. இந்த சென்ட்டிமெண்ட்டை மனதில் வைத்தே, அஜித் படம் வெளியாகும் மாதத்தில் தன் படம் வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் ஜெய். அதன்படி, 4 வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் படத்தைத் தொடர்ந்து இரண்டு வார இடைவெளியில் ஜெய் படமும் ரிலீஸாகவிருக்கிறது.

அஜித் நடித்திருக்கும் என்னை அறிந்தால் படம் வரும் 29ம் தேதி வெளியாகவிருக்கிறது. சரியாக இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் வலியவன் திரைப்படம் பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி