செய்திகள்,திரையுலகம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!…

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!…

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான ‘உத்தமவில்லன்’ பட டிரைலர்!… post thumbnail image
சென்னை:-கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட தருவாயில் விரைவில் படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், உத்தமவில்லன் டிரைலர் திருட்டுத்தனமாக இணையதளத்தில் பரவியுள்ளது. தியேட்டரில் திரையிடப்பட்ட டிரைலரை யாரோ ஒருவர் தனது கேமராவில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார்.

இந்த டிரைலரில் கமல், பல்வேறு தோற்றங்களில் வந்துபோவது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இயக்குனர் கே.பாலச்சந்தரும் தோன்றுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இப்படத்தின் டிரைலர், இவ்வாறு திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியானது குறித்து படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி