1000 புதிய கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்…

விளம்பரங்கள்

வாஷிங்டன் :- அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொள்ள ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அதில் சக்தி வாய்ந்த ‘கெப்லர்’ டெலஸ்கோப் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அது விண்வெளியில் ஊடுருவிச் சென்று புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த நிலையில், தற்போது ‘கெப்லர்’ டெலஸ்கோப் 1000–க்கும் மேற்பட்ட புதிய கிரகங்களை கண்டு பிடித்துள்ளது. அவற்றில் 8 கிரகங்கள் பூமியை விட 2 மடங்கு சிறியது. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ளன.

மேலும் சூரிய குடும்பத்தை தாண்டி வெகு தொலைவில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்களும் கண்டறியப்பட்டு அவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1000 கிரகங்களின் 554 கிரகங்கள் மட்டும் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை நாசா மையத்தின் ‘கெப்லர்’ குழு தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: