அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…

சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!…

சுனந்தா கொலை வழக்கை அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சசிதரூர் கோரிக்கை!… post thumbnail image
குருவாயூர்:-கேரள மாநிலம் குருவாயூர் அருகே கடந்த 2 வாரங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த சசிதரூர், நேற்று பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:- இந்த வழக்கில் விசாரணை எதுவரை சென்றிருக்கிறது என்பது பற்றி எனது மனதில் பல கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நான் விளக்கமாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். போலீஸ் கமிஷனரும் இதுதொடர்பாக விசாரணை அதிகாரியிடம் பேசியிருப்பார் என்று கருதுகிறேன்.

போலீசார் என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை விரைவில் கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறேன். அதன்பின்னர் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அது அவர்களது முடிவு. ஆனால் முக்கியமான விஷயம், விசாரணை தொழில்ரீதியாக நடத்தப்பட வேண்டும். அரசியல் அழுத்தமோ, தலையீடோ, முன்கூட்டியே ஒரு நிலைப்பாட்டை எடுப்பதோ கூடாது. சுனந்தா மரணத்தில் தவறுகள் நடந்திருப்பதாக எனது குடும்பத்தில் யாரும் கருதவில்லை. எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் சுனந்தாவிடம் அன்பாக நடந்து கொண்டனர். ஆனாலும் போலீசாரின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். போலீசார் அவர்களது கடமையை செய்யட்டும். நாங்கள் அனைவரும் பிரச்சினையை கூர்ந்து கவனிக்க விரும்புகிறோம்.

சுனந்தா உள்பட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். நான் எனது மனைவியை இழந்து இருக்கிறேன். இந்த ஒரு வருடமாக நான் துயரப்படக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதனால் வலியுடனேயே ஒரு வருடத்தை கடந்து இருக்கிறேன். போலீஸ் விசாரணை நடந்து வருவதாலேயே நான் இந்த விஷயத்தில் ஒரு வருடமாக அமைதியாக இருந்தேன். ஆனால் ஊடகங்களில் பல தேவையற்ற, பிரச்சினைக்குரிய, திரித்துக்கூறப்பட்ட செய்திகள் இதுதொடர்பாக வருகிறது. தனிப்பட்ட ஒருவரின் துயர சம்பவத்தில் மனிதநேயத்துடன் எழுத வேண்டும். இவ்வாறு சசிதரூர் எம்.பி. கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி