செய்திகள்,திரையுலகம் சஞ்சய்தத்துக்கு பரோல் நீடிப்பு இல்லை: மராட்டிய அரசு அறிவிப்பு!…

சஞ்சய்தத்துக்கு பரோல் நீடிப்பு இல்லை: மராட்டிய அரசு அறிவிப்பு!…

சஞ்சய்தத்துக்கு பரோல் நீடிப்பு இல்லை: மராட்டிய அரசு அறிவிப்பு!… post thumbnail image
புனே:-55 வயதாகும் நடிகர் சஞ்சய்தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 18 மாதங்கள் வரை அவர் சிறையில் இருந்து இருக்கிறார்.கடந்த டிசம்பர் 24ம் தேதி சஞ்சய்தத்து 14 நாள் பரோலில் விடுதலையானார். மும்பை வந்து மனைவி மான்யதா மற்றும் மகன், மகளையும் நண்பர்களையும் சந்தித்தார். நடிகர் அமீர்கானுடன் தான் நடித்து இருந்த ‘பிகே’ படத்தை பார்த்தார்.

இந்நிலையில் சஞ்சய்தத் பரோலை நீடிக்க கேட்டு மராட்டிய உள்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்து இருந்தார். அதற்கு மராட்டிய அரசு பதில் தராமல் இருந்தது. இதனால் நேற்று முன்தினம் சஞ்சய்தத் புனேக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் எரவாடா ஜெயிலுக்கு சென்றார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. பரோல் நீடிப்பு கேட்ட மனு அரசின் பரிசீலனையில் இருப்பதால் அதுபற்றிய முடிவு வரும் வரை சிறையில் அடைக்க முடியாது என சிறை நிர்வாகம் தெரிவித்து விட்டது. சஞ்சய்தத் 2 மணி நேரம் சிறை வளாகத்திலேயே இருந்து விட்டு மீண்டும் மும்பை திரும்பினார்.

இதற்கிடையே சஞ்சய்தத்தின் பரோல் நீடிப்பு கோரிக்கை மனுவை மராட்டிய அரசு இன்று நீராகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து சஞ்சய்தத் உடனே சரண் அடையுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு நகலை வழங்குவதற்காக போலீசார் சஞ்சய் வீட்டுக்கு சென்றனர்.
உத்தரவு நகலை போலீசார் சஞ்சய்தத்திடம் வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சஞ்சய்தத் சிறைத்துறை அதிகாரிகளிடம் சரண் அடைகிறார். அவர்கள் அவரை மீண்டும் புனே அழைத்துச் சென்று எரவாடா ஜெயிலில் அடைக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி