செய்திகள்,விளையாட்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!…

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் சாதனைகள்!… post thumbnail image
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி சிறப்பாகவே ஆடியது. இதற்கு முன்பு ஒயிட்வாஷ் ஆகி இருந்த அணி தற்போது 2 டெஸ்டில் மட்டும் தோற்றது. இரண்டு டெஸ்டை ‘டிரா’ செய்தது. தோல்வி அடைந்த 2 டெஸ்டிலுமே இந்தியா வெற்றி வரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

4 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் வீராட்கோலி 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும். 4 சதமும், ஒரு அரைசதமும் அடித்தார். அதிகபட்சமாக 169 ரன் குவித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் சுமித்துக்கு (769 ரன்) அடுத்தப்படியாக ரன் குவித்தார். முரளிவிஜய் 1 சதமும், 4 அரைசதத்துடன் 482 ரன்னும் (144 அதிகபட்சம்), ரகானே 1 சதம், 2 அரை சதத்துடன் 399 ரன்னும் (147அதிகபட்சம்) எடுத்தனர். முகமதுஷமி 15 விக்கெட்டும் (3 டெஸ்ட்), அஸ்வின் 12 விக்கெட்டும் (3), உமேஷ் யாதவ் 11 விக்கெட்டும் (3) எடுத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி